உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

குரும்பூரில் வீட்டில் பதுக்கிய 427 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-01-17 09:32 GMT   |   Update On 2022-01-17 09:32 GMT
குரும்பூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
குரும்பூர்:

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிறுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

இதனை பயன்படுத்தி சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக குரும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ் பெக்டர் முத்துகிருஷ்ணன், ஆறுமுகநயினார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக குரும்பூர் பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது குரும்பூர் அருளானந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீநாத்துரை என்ற சின்னதுரை என்பவரின் வீட்டில் 427 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

6 சாக்கு மூட்டைகளில் 5700 புகையிலைப்பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக மதுபாட்டில்களையும், புகையிலையும் பறிமுதல் செய்த குரும்பூர் போலீசார் சின்னதுரையை கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய செல்வகுமார் மற்றும் காளிமுத்து ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News