உள்ளூர் செய்திகள்
வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2022-01-17 09:31 GMT   |   Update On 2022-01-17 09:31 GMT
வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வேலூரில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட குடிநீர் முற்றிலும் தடைபட்டது.

 மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டில் இன்று குடிநீர் கேட்டு அப்பகுதி ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இன்னும் 10 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். மேலும் மாநகராட்சி லாரிகள் மூலம் என்று குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர்.

 இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News