உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

Published On 2022-01-17 14:42 IST   |   Update On 2022-01-17 14:42:00 IST
கரூரில் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானர்.
கரூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். தற்போது 423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News