உள்ளூர் செய்திகள்
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
பெரம்பலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பாலையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பொலார்ட் என்கிற நவீன்குமார் (வயது 23), நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அருகே மதுரைவீரன் கோவில் புதூரை சேர்ந்த சேகர் மகன் கோகுல் என்ற கோகுல் ஸ்ரீ (20), பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த யயாதி (39) ஆகிய 3 பேர் பெரும்பலூரில் 7 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகி இருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து 13லு பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், மடிக்கணினி , செல்போன் ஆகியவை மீட்கப்பட்டது.