உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

நாகர்கோவில் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பெண்கள் எதிர்ப்பு

Published On 2022-01-17 13:58 IST   |   Update On 2022-01-17 13:58:00 IST
நாகர்கோவில் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாகர்கோவில்:

இரணியல்  அருகே கண்டன்விளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலை அருகே தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 10மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 பெண்கள் அங்கு திரண்டு வந்தனர்.  அவர்கள் அங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என  தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன் ஸ் பெக்டர் சுந்தர மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் போலீசாரிடம், இங்கு செல்போன் கோபுரம்அமைக்கக்கூடாது. இல்லாவிட்டால் தொடர்ந்து சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

Similar News