உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அழைத்து சென்றனர்

தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி மகள்கள் தர்ணா

Published On 2022-01-17 08:27 GMT   |   Update On 2022-01-17 08:27 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி 2 மகள்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் மகாமுனி (வயது 45). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அவரது மகள்கள் 2 பேர் இன்று அரசு ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் வீரமணி, மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில் எனது தந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

கடந்த 4 நாட்களாக எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை. ஐ.சி.யு.வில் அனுமதிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.  இதற்காக பரிசோதனை செய்ய அழைத்துச் சென்ற போது எங்களிடம் பணம் வாங்கினார்கள். தந்தைக்கு உடல்நிலை சரியானால் போதும் என்ற நம்பிக்கையில் நாங்களும் பணம் கொடுத்து வந்தோம்.

ஆனால் அவர் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். டாக்டர்கள் அவர்களை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News