கும்மிடிப்பூண்டி அருகே ஊரடங்கில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே ஊரடங்கில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது
பதிவு: ஜனவரி 17, 2022 09:13 IST
மதுபாட்டில்
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு ஊரடங்கை மீறி திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 49), ரவி (48) ஆகிய 2 பேர் சிக்கினர். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 229 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.