மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
பதிவு: ஜனவரி 16, 2022 18:26 IST
கைது
விருத்தாசலம்:
மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவி, கனகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மங்கலம்பேட்டை
மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த முஹமது(வயது 21), பர்வேஷ் ஹேம்மதூ(21), அலியார் நகர் அரபாஸ் அகமத்(35) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.