உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் விடுபட்ட 52 ஆயிரத்து 354 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

Published On 2022-01-16 08:05 GMT   |   Update On 2022-01-16 08:05 GMT
விடுபட்டவர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, நாளை ரேஷன் கடைகள் செயல்படுமென, கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
திருப்பூர்:

தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருட்கள் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு 4-ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களும், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, தமிழகத்தில், 92.74 சதவீதம் பயனாளிகள், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். மீதியுள்ள நபர்கள், பொங்கல் பரிசு பெற வசதியாக, நாளை (17ம் தேதி) ரேஷன் கடைகள் வழக்கம் போல்செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்ட அளவில், 52 ஆயிரத்து, 354 பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. நிலுவையில் உள்ள, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்க வசதியாக, 17ம் தேதி (நாளை) ரேஷன் கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் வசதிக்காக, காலை, 7:00 மணி முதல் கடைகள் செயல்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறாமல் விடுபட்டவர்கள், பெற்று கொள்ளலாம். 

இவ்வாறு, அவர்கள் தெவித்தனர்.  
Tags:    

Similar News