உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கஞ்சா கடத்தல் வழக்கு- தலைமறைவாக இருந்த இலங்கை நபர் கைது

Published On 2022-01-16 07:00 GMT   |   Update On 2022-01-16 07:00 GMT
கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இலங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:

கடந்த 2012-ம் ஆண்டு ஹெராயின் போதை வஸ்து கடத்திய வழக்கில் 
கைது செய்யப்பட்டு ஓராண்டு ஜெயிலில் இருந்து ஜாமினில் 
வெளிவந்தவர் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4.11.21 அன்று புஷ்பவனம் கடற்கரையிலிருந்து 
படகில் கடத்த முயன்ற 92 கிலோ கஞ்சாவை படகுடன் கைப்பற்றி 
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஹெராயின் வழக்கில் 
கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தவர் சம்மந்தப்பட்டது தெரியவந்தது. அதுமுதல் அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதையடுத்து தஞ்சாவூர் கியூ பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் கியூ பிரிவு போலீசார் விசாரணையில் மேற்படி நபர் மல்லிப்பட்டினம் கடற்கரையில் ஒரு தனியாரிடம் மீன்பிடி தொழில் செய்து வரும் இலங்கை முல்லைதீவு 
தீத்தகரை சிலாவட்டம் ஆனந்தசெல்வம் மகன் மதன் (எ) ஆண்டனிசென்பீட்டா¢ (45) என்பவர்தான் மேற்படி நபர் 
என்பதை அறிந்து அவரை பிடித்து வேதாரண்யம் போலீசில் 
ஒப்படைத்தனர்.

வேதாரண்யம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News