உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை

நீர்வரத்து 1,975 கன அடி - மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி சரிவு

Published On 2022-01-16 05:20 GMT   |   Update On 2022-01-16 05:20 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1926 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 1975 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக கடந்த சில நாட்களாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 14-ந் தேதி 114.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 114.21 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 113.82 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ஒரு அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. 
Tags:    

Similar News