உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு பெட்டியை வழங்கிய காட்சி.

மருத்துவம்-சுகாதாரத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது-அமைச்சர் பேச்சு

Published On 2022-01-15 08:01 GMT   |   Update On 2022-01-15 08:01 GMT
உடன்குடி கிறிஸ்தியா நகரம் டி.டி.டி.ஏ.பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மருத்துவ பெட்டகம் வழங்கினார்.
உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியா நகரம் டி.டி.டி.ஏ.பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கோகிலா, எ.ஏஸ்.பி. ஹர்ஷ்சிங், உடன்குடி உராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் வரவேற்றார்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முகாமைக் தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சியால் இந்தியாவிலேயே கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

நோய்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ முதல்வர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.நோய்களின் தன்மையை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனைத் தீர்க்க முயல வேண்டும் என்கிறார்.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் திட்டங்களை அறிவிப்பதிலும். அதை செயல்படுத்துவதிலும் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News