உள்ளூர் செய்திகள்
.

சேலத்தில் மின் கம்பம் மீது லாரி மோதியது

Published On 2022-01-13 16:30 IST   |   Update On 2022-01-13 16:30:00 IST
சேலத்தில் மின்கம்பத்தின் மீது லாரி மோதியது. இதில் மின்கம்பம் சேதமானது.
சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் நேற்று முன்தினம் ஒரு லாரி லோடு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பம்  மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின் கம்பம் பலத்த சேதமடைந்தது.  

சேதமடைந்த மின் கம்பிகள், கம்பம், ஒயர்கள், பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம். இது குறித்து அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மின் வாரிய என்ஜினீயர் சதிஷ்குமார் அளித்த புகாரின் பேரில்  அரசு பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும்  விபத்து ஏற்படுத்திய லாரி  பறிமுதல் செய்யப்பட்டு சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.  லாரி எங்கிருந்து வந்தது?, அதன் உரிமையாளர் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News