உள்ளூர் செய்திகள்
கருப்பம்புலத்தில் 13 குளங்கள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம்
கருப்பம்புலத்தில் 13 குளங்கள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் ஊராட்சியில்
குளம், குட்டைகள் ஏலம் விடப்பட்டன.
இந்த ஊராட்சியில் உள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியில் உள்ள வெள்ளோடை, பெரிய காஞ்சி, வெப்போடை, வெள்ளோடை, நெல்லியோடை உள்ளிட்ட 6 குளங்களும், நடுகாட்டில் ஜயனார்குளம், மருதம்புலம், ராஜம்புலம், பைங்கால்குளம் வண்ணான் விச்சலடிகுளம், மேலக்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் குளம், குடைக்காரன்குளம் உள்ளிட்ட 17 குளங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கவிதா முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஊராட்சியில் உள்ள 17 குளங்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 290 ரூபாய் ஏலம் விடப்பட்டது. இதுகுறித்து கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் கூறியதாவது, கருப்பம்புலம் ஊராட்சிக்கு புதிதாக பதவி ஏற்ற பிறகு 2-வது முறையாக குளம், குட்டைகள் ஏலம் விடப்படுகின்றன.
தற்போது 3 லட்சத்து 34 ஆயிரத்து 290 ரூபாய்க்கு
17 குளங்களும் ஏலம் போனது.
இதுவரை இந்த ஊராட்சியில் இவ்வளவு தொகைக்கு குளங்கள் ஏலம் போனது இல்லை. தற்போது கூடுதலான தொகைக்கு ஏலம் போனதால் ஊராட்சியின் வருமானம் அதிகரித்துள்ளது என்றார்.