உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

ஊரடங்கில் இறைச்சி விற்றவர்கள் மீது வழக்கு

Published On 2022-01-09 12:43 IST   |   Update On 2022-01-09 12:43:00 IST
புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை:
தமிழக அரசு கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் வணிக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள் திறந்திருந்தன. ஊரடங்கை கடைபிடிக்காமல் தேவையில்லாமல் வெளியில் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். காய்கறி மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.

பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. உணவு கூடங்களில் பார்சலில்  உணவுப்  பொருட்கள் விற்கப்பட்டது. அதிகளவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News