உள்ளூர் செய்திகள்
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்திய காட்சி.

வேலூரில் 505 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Published On 2022-01-08 14:58 IST   |   Update On 2022-01-08 14:58:00 IST
வேலூர் மாவட்டத்தில் இன்று 505 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வேலூர்:-

கொரோனா வைரஸ் தொற்று, ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் ஆகியவை கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது.

இத்தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் தங் களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக அமைகிறது. அதனால் அரசின் சார்பில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வசிக்கும்  பகுதிகளிலேயே எளிதாக போட்டுக் கொள்ளும் வகை யில் மெகா தடுப்பூசி முகாம் கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கடந்த வாரங் களில் சனிக்கிழமை வந்ததால் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டன.

இன்று வழக்கம் போல மீண்டும் சனிக்கிழமைக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் கள் மாற்றப்பட்டு நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத் தாதவர்கள் இந்த முகாம் களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் 88 சதவீதம், 2-வது டோஸ் 58 சதவீதம் போடப்பட்டுள்ளது.

Similar News