உள்ளூர் செய்திகள்
போலீஸ்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் போலீசார்

Published On 2022-01-08 11:47 IST   |   Update On 2022-01-08 11:47:00 IST
தாம்பரம், ஆவடி மாநகர பகுதியிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி போலீஸ் கமி‌ஷனர்கள் ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி) ஆகியோரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக களத்தில் நிற்பவர்கள் போலீசார்.

பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களில் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஐகோர்ட் போலீஸ் உதவி கமி‌ஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே கொரோனா 2-வது அலையின் போது போலீஸ் துறை சில உயிரிழப்புகளையும் சந்தித்தது. இப்போதும் நோய் தொற்றுக்கு பலர் ஆளாகி வருவதால் பணியின் போது எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி கமி‌ஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.

பொது மக்கள், வாகன பயணிகளை விசாரிக்கும் போது உரிய இடைவெளியில் நின்று விசாரிக்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிந்திருக்காவிட்டால் முதலில் மாஸ்க் அணிய வைத்து விட்டு அதன் பிறகு பேச வேண்டும்.

குடிபோதையை பரிசோதிக்கும் போதும் ஊதுகுழாயை கையாளும் போதும் கவனம் தேவை. எல்லோரும் கையுறை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதேபோல் தாம்பரம், ஆவடி மாநகர பகுதியிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி போலீஸ் கமி‌ஷனர்கள் ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி ஆகியோரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

Similar News