உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

போராட்டத்தில் ஈடுபட்ட 215 பேர் மீது வழக்கு

Published On 2022-01-07 16:56 IST   |   Update On 2022-01-07 16:56:00 IST
பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் மற்றும்- போராட்டத்தில் ஈடுபட்ட 215 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பலூர்:

கொரோனா வைரஸ் 3 ஆம் அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியும், அனுமதியின்றியும் நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடத்தியது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீதும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 80 பேர் மீதும், பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய கேங்மேன் பயிற்சி பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாகவும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 75 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News