உள்ளூர் செய்திகள்
காவலர் குழந்தைகள் காப்பகம் திறப்பு
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம் மற்றும் நூலகம் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வசித்து வரும் போலீசார் பணியின்போது, அவர்களது குழந்தைகள் வீட்டில் தனிமையாக இருப்பதை உணர்ந்து, காவலர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம் திறக்க மாவட்ட காவல் துறையினரால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தையும் திறந்து வைத்தார்.
இதில் நாவல்கள், தொடர் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் என 100&க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் சுப்பராமன், ஆய்வாளர் அசோகன் உள்பட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.