உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டுள்ள காட்சி.

மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது

Published On 2022-01-06 06:10 GMT   |   Update On 2022-01-06 06:10 GMT
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது.
மேட்டூர்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்  இன்று  முதல் அமுலுக்கு வந்தன. துணிக்கடைகள், நகைக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க ப்பட்டனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள 45 திரையரங்குகளில் பெரும்பாலான திரையரங்குகள்  அதிக  பட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட்டது. விதி மீறிய திரையரங்கு நிர்வாகிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.  

 வீதி மீறல்களில் ஈடுபடும்   நிறுவனங்கள் மற்றும் தனி   நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில்  கண்காணிப்பு   தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை  தடுக்கும் வகையில் மேட்டூர் அணை பூங்கா இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என நீர்வள  ஆதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   

அதன்படி இன்று காலை மேட்டூர் அணை பூங்கா மூடபப்ட்டது.  ஏற்கனவே சேலம் அண்ணா பூங்கா, முட்டல் ஏரி பூங்காக்கள் மூடப்பட்டுள்2ளது குறிப்பிடதக்கது. மேலும் அனைத்து பகுதிகளிலம்  பொது மக்கள் முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடை பிடிக்குமாறும்  அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.  

Tags:    

Similar News