உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு அபராதரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2022-01-05 15:50 IST   |   Update On 2022-01-05 15:50:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில்  முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதரம் விதிக்கப்பட்டது. 


ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் நகர் பகுதியில் நேற்று நேதாஜி ரோடு, பஸ் நிலையம் அருகே முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  

நகராட்சி ஆணையாளர் மல்லிகா அறிவுறுத்தல் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் முகம் அணியாத மக்களிடம் அபராதம் விதித்தனர். 

எனவே பொதுமக்களும் உஷாராக  இருக்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர். 



Similar News