உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இல்லம் தேடி கல்வி திட்டம் - உடுமலை ஒன்றியத்தில் 224 தன்னார்வலர்கள் நியமனம்

Published On 2022-01-05 06:24 GMT   |   Update On 2022-01-05 06:24 GMT
உடுமலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக பள்ளிகள் சார்ந்த குடியிருப்பு பகுதிக்கு ஏற்றாற்போல் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கற்றல் இழப்பு ஏற்பட்டது.

இதனை சரி செய்யும் பொருட்டும் தன்னார்வலர் பங்களிப்புடன் கற்றல் வாய்ப்பு வழங்குதல், கற்றல் திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ‘இல்லம் தேடி கல்வி திட்டம்‘ செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி உடுமலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக பள்ளிகள் சார்ந்த குடியிருப்பு பகுதிக்கு ஏற்றாற்போல் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 107 பள்ளிகள் உள்ள நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,102 பேர், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 122 பேர் என மொத்தம், 224 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கனவே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், ‘இல்லம் தேடி கல்வி’ என்ற ‘ஆப்’ வாயிலாக மாணவர்களின் விவரம் அளித்துள்ள நிலையில் கதை, பாட்டு என மாலை நேர வகுப்புகளை துவக்கியுள்ளனர். இதற்கான மையத்துவக்க விழா சின்னவீரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. 

பி.டி.ஓ., மணிகண்டன், உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் கலைமணி, வட்டார கல்வி அலுவலர் மனோகரன், சின்னவீரன்பட்டி ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சோமசுந்தரம், வட்டார இல்லம் தேடி குழு உறுப்பினர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராபின், ஆசிரியர் பயிற்றுனர்கள் கார்த்திகேயன், ஜனட்ரோசலின் ஆகியோர் செய்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் செல்லும் தன்னார்வலர்கள் வீடுகள் மட்டுமின்றி, ஏதேனும் ஒரு பொது இடத்தைத்தேர்ந்தெடுத்தும் மாலை நேர வகுப்புகளை நடத்தலாம். 

குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவதுடன் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத் தருவர். அதேபோல் கற்றல் வாய்ப்பை வழங்குதல், அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்க செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் என்றனர்.  
Tags:    

Similar News