உள்ளூர் செய்திகள்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சிவகாசி, சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஆலைகள் உள்ளன.
நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறை அனுமதி பெற்று பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை தவிர அனுமதி இன்றியும் சிலர் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், உயிர்ப்பலி நிகழ்வதும் நடந்து வருகிறது. அனுமதி பெற்ற ஆலைகளிலும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சிவகாசி-சாத்தூர் இடையே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). இவர் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மஞ்சள்ஓடைப்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களோடு கருப்பசாமியும் மருந்து கலவை அறைக்கு சென்று பணியை தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் காரணமாக மருந்து கலவைகள் வைக்கப்பட்டிருந்த அறை தரைமட்டமானது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். மேலும் வெடி விபத்து ஏற்பட்டதும் பக்கத்து அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, கொம்மங்கிபுரம் காசி (40), சாத்தூர் காமாட்சிபுரம் செந்தில் (33) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொம்மங்கிபுரம் ஜெகநாதன் மனைவி சரஸ்வதி, சீனிவாசன் மனைவி அய்யம்மாள் (47), பெருமாள் (48), மஞ்சள்ஓடைப்பட்டி முனியசாமி (26) ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் மற்றும் வருவாய் துறையினரும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, கொம்மங்கிபுரம் காசி (40), சாத்தூர் காமாட்சிபுரம் செந்தில் (33) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொம்மங்கிபுரம் ஜெகநாதன் மனைவி சரஸ்வதி, சீனிவாசன் மனைவி அய்யம்மாள் (47), பெருமாள் (48), மஞ்சள்ஓடைப்பட்டி முனியசாமி (26) ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் மற்றும் வருவாய் துறையினரும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடந்த 1-ந்தேதி சிவகாசி அருகே உள்ள களத்தூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியான நிலையில், தற்போது மற்றொரு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.