உள்ளூர் செய்திகள்
சட்டவிரோதமாக மது விற்ற 6 பேர் கைது
புதுக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை தொடர்ந்து, நகரில் பல பகுதிகளில் போலீசார், ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மேலாத்தூர் ஊராட்சி சூரன்விடுதி ராமையா மகன் முத்துக்குமார், வம்பன் 4 ரோடு ஆவுடையப்பன் மகன் ஆறுமுகம், சூரன்விடுதியை சேர்ந்த ராஜய்யா மகன் மணிக்கண்டன், கீழக்கு தம்பிரான்கோட்டை முத்துச்சாமி மகன் குமரேசன், பாத்தம்பட்டி வடக்கு ராமசாமி மகன் சக்திவேல், புதுக்கோட்டைவிடுதி வீரப்பன் மகன் சங்கர் ஆகிய 6 பேர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை பார்த்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.