உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மக்காச்சோளம் கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் கவலை

Published On 2022-01-04 13:06 IST   |   Update On 2022-01-04 13:06:00 IST
கடந்த காலங்களில் இருந்த படைப்புழு தாக்குதல் தற்போது ஓரளவு கட்டுக்குள் உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை, பல்லடம் வட்டாரத்தில் பல ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட படைபுழு தாக்கம் காரணமாக விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்தனர். 

இதையடுத்து தமிழக அரசு ‘டெலிகேட்’ மருந்தை மானிய விலையில் வழங்கி, படைப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக புழுக்களின் தாக்குதல் பெருமளவில் குறைந்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டு, பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:

கடந்த காலங்களில் இருந்த படைப்புழு தாக்குதல் தற்போது ஓரளவு கட்டுக்குள் உள்ளது. கோடை உழவு செய்து ஒருமுறை மட்டுமே ‘டெலிகேட்’ மருந்து அடித்தோம். இதனால் படைப்புழு தாக்கம் குறைந்துள்ளது. 

ஏக்கருக்கு 25 முதல் 30 குவிண்டால் வரை கிடைக்கும். அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்டு பொங்கல் முடிந்து அறுவடைக்கு வரும். சில மாதங்களுக்கு முன் குவிண்டால் ரூ.2,200 க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.1,700ஆக குறைந்துள்ளது. சிண்டிகேட் போட்டு வியாபாரிகள் விலையை குறைக்கின்றனர். 

குவிண்டால் ரூ.2 ஆயிரத்திற்கு விற்றால் மட்டுமே விலை கட்டுப்படியாகும். படைப்புழு பாதிப்பு குறைந்த நிலையில் கட்டுப்படியாகாத விலை கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News