உள்ளூர் செய்திகள்
வெங்கடேஷ்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர்

Published On 2022-01-03 15:24 IST   |   Update On 2022-01-03 15:24:00 IST
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர்  மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர்  போக்கு வரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் தர்மராஜ்.

இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்    வடக்கு ரத வீதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.  அப்போது  அங்கு  ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதனை நிறுத்தும்படி சப்-இன்ஸ்பெக்டர்  தர்மராஜ் சைகை காட்டினார். ஆனால் மோட்டார் சைக்கிள் நிற்காமல் செல்ல முயன்றது. 

இருப்பினும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.விசாரணையில்  மோட்டார் சைக்கிளில் வந்தவர்   ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேஷ் (வயது 26) என தெரியவந்தது.

விதிகளை மீறி வேகமாக வந்ததாக அவர் மீது சப்-இன்ஸ் பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்  கத்தியை காட்டி  சப்-இன்ஸ்பெக்டர்   தர்மராஜிக்கு கொலை  மிரட்டல்  விடுத்தார். மேலும் கத்தியால் குத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக  ஸ்ரீவில்லிபுத்தூர்  போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டர்   தர்மராஜ் புகார் செய்தார். அதன்பேரில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொல்ல முயற்சி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசை கைது செய்தனர்.

Similar News