உள்ளூர் செய்திகள்
மல்லிகை பூ

புதுக்கோட்டை கீரமங்கலத்தில் பூக்களின் விலை உயர்வு

Published On 2022-01-01 15:33 IST   |   Update On 2022-01-01 15:33:00 IST
ஆங்கில புத்தாண்டையொட்டி கீரமங்கலத்தில் பூக்களின் விலை உயர்ந்தது.
ஆலங்குடி:

மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றியுள்ள செரியலூர், சேந்தன்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி,பெரியாளூர், நெய் வத்தளி, மேற்பனைக்காடு, கரம்பக்காடு, மாங்காடு, வடகாடு, வம்பன், மாஞ்சன் விடுதி, மழையூர், சம்மட்டி விடுதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பூக்களை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலம் கொத்தமங்கலம் பூ கமி‌ஷன் மண்டிக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். கீரமங்கலம் பூ கமி‌ஷன் மண்டிக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். பண்டிகை,திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு பூக்கள் விற்பனையாகும். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ஆங்கில புத்தாண்டு என்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

முல்லை பூ கிலோ ரூ.1,000- க்கும், மல்லிகை ரூ.700-க்கும், கனகாம்பரம், காட்டுமல்லி ரூ.600-க்கும் விற்பனையானது. தொடர் மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News