உள்ளூர் செய்திகள்
கத்தரிக்காய்

கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ், கத்தரிக்காய் விலை வீழ்ச்சி

Published On 2022-01-01 07:49 GMT   |   Update On 2022-01-01 07:49 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக கேரட் மற்றும் முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

போரூர்:

கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 320 லாரிகளில் காய்கறிகள் வந்து விற்பனைக்கு குவிந்துள்ளது. நள்ளிரவு வழக்கம் போல விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் மந்தமானது.

கடந்த மாதம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலை இன்று கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் வரத்து குறைவு காரணமாக கேரட் மற்றும் முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

தக்காளி-ரூ.43, நாசிக் வெங்காயம்-ரூ.35, சின்ன வெங்காயம்-ரூ.60, ஆக்ரா உருளைக்கிழங்கு-ரூ.15, கோலார் உருளைக் கிழங்கு-ரூ.35, உஜாலா கத்தரிக்காய்-ரூ.20, அவரைக்காய்-ரூ.30, வெண்டைக்காய்-ரூ.50, பீன்ஸ்-ரூ.20, கோவக்காய்-ரூ.40, பன்னீர் பன்னீர் பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ15, சேனைக்கிழங்கு-ரூ.12, சேம்பு-ரூ.20, கொத்தவரங்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.30, வெள்ளரிக்காய்-ரூ.10, முருங்கைக்காய்-ரூ.150, ஊட்டி கேரட்-ரூ.70, ஊட்டி பீட்ரூட்-ரூ.70, முட்டை கோஸ்-ரூ.40, சவ்சவ்-ரூ.12, நூக்கல்-10, முள்ளங்கி-ரூ.20, காலி பிளவர் ஒன்று-ரூ30, சோளம்-ரூ.25, குடை மிளகாய்-ரூ.80, இஞ்சி-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ50.

Tags:    

Similar News