உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை

ஜிஎஸ்டி விஷயத்தில் மக்களை குழப்புகிறது திமுக - அண்ணாமலை பேட்டி

Published On 2021-12-31 13:00 GMT   |   Update On 2021-12-31 13:00 GMT
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாட்டோம் என கடந்த 6 மாத காலமாக தமிழக நிதித்துறை அமைச்சர் கூறுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலையானது ஜிஎஸ்டி-க்குள் வரவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு கூறுகிறார். அதைத்தான் நாங்களும் சொல்கிறாம். ஆனால் கடந்த 6 மாத காலமாக இந்த மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர், ‘நாங்கள் கொண்டு வரமாட்டோம்’ என்கிறார்.

இதுபற்றி பேசிய எம்.பி. டி.ஆர்.பாலு ‘அது தனி நபர் கருத்து. பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும் என கட்சி சார்பாக நான் சொல்கிறேன்’ என்கிறார். 

உண்மையிலேயே திமுகவில் யார் சொல்வதை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்வது? டெல்லி பிரதிநிதியான எம்பி சொல்வதை எடுத்துக்கொள்வதா? மாநில நிதித்துறை அமைச்சர் சொல்வதை எடுத்துக்கொள்வதா? ஏன் மக்களை  குழப்புகிறீர்கள்?

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
Tags:    

Similar News