உள்ளூர் செய்திகள்
விமானம்

சென்னையில் தொடர் மழை- 20 விமானங்கள் தாமதம்

Published On 2021-12-31 09:15 GMT   |   Update On 2021-12-31 09:15 GMT
பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டிதீர்த்தது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.

இதனால் விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வர முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

நேற்று இரவு 7 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணி வரை 20 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 7 சர்வதேச விமானங்களும், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் வந்தன.
Tags:    

Similar News