இயற்கையை நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும்.
இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
பதிவு: டிசம்பர் 30, 2021 14:57 IST
கோப்புபடம்
உடுமலை:
வெற்றி அமைப்பின் ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டம், ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உடுமலை அருகேயுள்ள தம்புரான் கோவில் சத்தியபால் தோட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில் அமைப்பு தலைவர் சிவராம் பேசியதாவது:
மரங்கள் நடப்படுவதால் தூய காற்று, மழை மட்டுமின்றி, ஏராளமான பறவைகள், பூச்சிகளுக்கு உணவு மற்றும் வாழ்விடமாக உள்ளது. மரங்கள் அழிக்கப்பட்டால் ஒன்றை ஒன்று சார்ந்து உணவு சங்கிலியாக விளங்கும் உயிர்ச்சுழற்சி மண்டலத்தில் சிக்கல் ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சிறிய பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எனவே மரக்கன்றுகள் வளர்ப்பு, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யும் வகையில் இயற்கை விவசாயம் ஆகியவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இயற்கையை நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும். அதே போல், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள், நீர் நிலைகள் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணர்வு, சுற்றுச்சூழல் காப்பதில் கவனம் செலுத்தி நமது சமுதாயத்தை காப்பதோடு வரும் தலைமுறைக்கு இயற்கை வளங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்றார்.
Related Tags :