உள்ளூர் செய்திகள்
கொள்ளை

பீளமேடு அருகே பேராசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளை

Update: 2021-12-28 11:27 GMT
பீளமேடு அருகே பேராசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 32). தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 4½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீட்டிற்கு திரும்பிய கிருஷ்ணகுமார் வீட்டில் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News