உள்ளூர் செய்திகள்
அரசு அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையில் 3 பேர் கைது
காஞ்சிபுரம் அரசு அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே உள்ள மாருதி நகரில் வசித்து வருபவர் மேகநாதன். இவர் உள்ளாட்சி நிதித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 23-ந்தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கொள்ளையில் ஈடுபட்டது காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் பகுதியை சேர்ந்த உறவினரான சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள், சாலவாக்கத்தை சேர்ந்த கவுதம், சிவக்குமார் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பவுன் நகை, 31 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.