உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-28 13:17 IST   |   Update On 2021-12-28 13:17:00 IST
கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், மானிய உதவிகள் என அனைத்து தகவல்களை பெறலாம்.
உடுமலை:

மத்திய அரசின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘உடுமலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’ சார்பில் உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் விவசாய பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 

இதுகுறித்த ஆலோசனைக்கூட்டம் உடுமலை ரோட்டரி அரங்கில் நடந்தது. 

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசுகையில்,

‘’கருத்தரங்கில், விவசாயிகள் ஆர்வலர் குழு பதிவு, நடவு முதல் அறுவடை, பின்சார் முறைகள் உயரிய தொழில் நுட்பங்கள், உணவு பதப்படுத்துதல், தொழில் வாய்ப்புகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், மானிய உதவிகள் என அனைத்து தகவல்களை பெறலாம். 

எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Similar News