உள்ளூர் செய்திகள்
பள்ளி வளாகத்திலுள்ள சுவர்களில், வண்ணச்சித்திரங்கள் வரைய திருப்பூர் ‘பட்டாம்பூச்சி இயக்கம்‘ மற்றும் ‘டிரீம்20’ அமைப்பினர் முன்வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவரில் அழகான ஓவியங்களை வரைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனியன் தொழில், பள்ளிகள், ஆண்டிபாளையம் குளம் போன்ற அழகிய ஓவியங்கள் மேற்குபுற சுவரில் வரையப்பட்டன. இந்நிலையில் கீழ்புறம் உள்ள சுவற்றிலும் 12 வகையான ஓவியங்களை வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் குமரன் நினைவகம், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அமராவதி அணை உள்ளிட்ட ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியுள்ளது.
அழகான ஓவியம் தீட்டி கண்ணை கவரும் வகையில் ‘பிரின்டிங்’ இங்க் மற்றும் பெயின்ட் வகைகளை கொண்டு நவீன ஓவியம் தீட்டப்படுவதாக ஓவிய கலைஞர்கள் தெரிவித்தனர்.
உடுமலை ஒன்றியம் உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வகுப்பறை சுவர்களை அழகாக்கி கற்றல் சூழலை மேம்படுத்தி மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை அதிகரிக்க தன்னார்வலர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி, வகுப்பறை உட்பட பள்ளி வளாகத்திலுள்ள சுவர்களில், வண்ணச்சித்திரங்கள் வரைய திருப்பூர் ‘பட்டாம்பூச்சி இயக்கம்‘ மற்றும் ‘டிரீம்20’ அமைப்பினர் முன்வந்தனர்.
இந்த தன்னார்வ அமைப்பைச்சேர்ந்தவர்கள் பள்ளி சுவர்களில் சித்திரங்கள் வரையும் பணியை மேற்கொண்டனர். குழந்தைகளை கவரும் கார்ட்டூன் ஹீரோக்கள், விலங்குகளின் ஓவியங்களை வரைந்து பள்ளி வளாகத்தை வண்ணமயமாக மாற்றினர்.