உள்ளூர் செய்திகள்
அமைச்சர்கள் மனுக்கள் பெற்ற காட்சி.

கன்னிவாடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்கள்

Published On 2021-12-27 15:35 IST   |   Update On 2021-12-27 15:35:00 IST
பொதுமக்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
தாராபுரம்:

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவதுடன், மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக திருப்பூர் மாநகரில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற நிலையில், இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது பொதுமக்களின் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 

Similar News