உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? டி.டி.வி.தினகரன் கேள்வி

Published On 2021-12-27 11:42 IST   |   Update On 2021-12-27 12:38:00 IST
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?



ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?

இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது. மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News