உள்ளூர் செய்திகள்
புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை கடைவீதி, அம்மாபேட்டை, அங்கு செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது புதுப்பேட்டை கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) என்பதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.