உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

கண்டமனூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-12-26 15:49 IST   |   Update On 2021-12-26 15:49:00 IST
கண்டமனூர் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தேனி:

கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரெங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.

Similar News