உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கயல்விழி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தவர்களை படத்தில் காணலாம்.

அண்ணா கூட்டுறவு தொழிற்சங்க மாநில தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

Update: 2021-12-26 08:04 GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் 20 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
தாராபுரம்:

அ.தி.மு.க.அண்ணா கூட்டுறவு தொழிற் சங்க மாநில தலைவர் சொசைட்டி சோமு மற்றும் தாராபுரம் அ.தி.மு.க. 22வது வார்டு கிளை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் 20 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

தாராபுரம் அண்ணா சிலை அருகே உள்ள நகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க.அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ் மற்றும் கோவிந்தராஜ் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News