உள்ளூர் செய்திகள்
கொள்ளை

புளியங்குடியில் தபால் ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை

Published On 2021-12-25 09:19 GMT   |   Update On 2021-12-25 09:19 GMT
புளியங்குடியில் தபால் ஊழியர் வீட்டில் மேஜை மீது வைத்திருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:

புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27), இவர் அரியநாயகிபுரம் தபால் அலுவலகத்தில் ஊழியராக உள்ளார்.

இவர் அதே பகுதியில் வீடு ஒன்று புதிதாக கட்டி வருகிறார். இதற்காக சம்பவத்தன்று ரூ.1.80 லட்சம் வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளார். இரவு வீட்டில் உள்ள மேஜையில் பணத்தை வைத்துவிட்டு சுப்பிரமணியன் தூங்க சென்றார்.

காற்று வர வேண்டும் என்பதற்காக முன்பக்க வாசலை திறந்து வைத்திருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மேஜையில் இருந்த பணத்தை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோ மற்றும் வீட்டில் இருந்த மற்ற இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த சுப்பிரமணியன் புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News