உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 1329 பேர் மீது வழக்கு
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 1329 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவித்து உள்ளார்.
அதன்படி பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் போலீசார் ரோந்து சென்று பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது வரை 580 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இருப்பினும் 28.9.2021 முதல் நேற்று முன்தினம் வரை இந்த விதிமுறைகளை மீறி பொது இடங்களில் மது அருந்திய 1329 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.