உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பொங்கலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-12-24 09:15 GMT
அலகுமலையை அடுத்த கருங்காலி பாளையம் பகுதி, பொங்கலூரில் இருந்து பல்லடம் செல்லும் வழியில் டோல்கேட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர்:

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்தது. 

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொங்கலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இடங்களை ஆய்வு செய்தனர். அதில் ஏற்கனவே நடத்தப்பட்ட இடத்தில் போதுமான இடம் இல்லாததால் மாற்று இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அலகுமலையை அடுத்த கருங்காலிபாளையம் பகுதி, பொங்கலூரில் இருந்து பல்லடம் செல்லும் வழியில் டோல்கேட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

தொடர்ந்து மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலுக்கு சொந்தமான இடம் நல்லா கவுண்டம்பாளையம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து போட்டி நடத்துவதற்கான இடம் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News