உள்ளூர் செய்திகள்
டி.டி.வி. தினகரன்

நாளை நினைவுநாள்- எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மரியாதை

Published On 2021-12-23 11:31 IST   |   Update On 2021-12-23 11:31:00 IST
எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, நாளை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
சென்னை:

அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் காலை 11.30 மணிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வரக்கூடிய கழக உடன்பிறப்புகள், மெரினா கடற்கரை சாலைக்கு அருகே உள்ள சுவாமி சிவானந்தா சாலையில் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இன்றி ஒன்றுகூடி காலை 11 மணிக்கு மேல் அங்கிருந்து எம்.ஜி.ஆரின் நினைவிடம் நோக்கி வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News