உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதி பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் அபராதம்
பொன்னமராவதி பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாக பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்தநிலையில் பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.