உள்ளூர் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் பார்வையிட்டபோது எடுத்த படம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,994 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

Published On 2021-12-22 16:43 IST   |   Update On 2021-12-22 16:43:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,994 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 132 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பங்களை வழங்கினர். மாற்றுத் திறனாளிகளின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்கினர். அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் கலெக்டர் அறிவுரையின்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 37 மாற்றுத்திறனாளிகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

இந்த முகாமில் உடல் செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.1,500 மற்றும் மாற்றுத்திறனாளிகளை பார்த்து கொள்பவர்களுக்கு பராமரிப்புத் தொகை ரூ.1000 வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டது.‌

முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், மாவட்டத்தில் இதுவரை 1,239 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, 1,113 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை, 1,642 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை என 3,994 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 6 பேருக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 247 மாற்றுத்திறனாளிகள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 நபர்களுக்கு உயர் ஆதரவற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News