உள்ளூர் செய்திகள்
இன்ஸ்டாகிராம்

இளம்வயதினருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர்

Update: 2021-12-22 10:04 GMT
புதுக்கோட்டை அருகே இளம்வயதினருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பகுதியில் இளம் வயதினரை குறிவைத்து செக்ஸ் எண்ணத்தை தூண்டும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்களை அனுப்பி வருவதாக வந்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுரி விசாரணை மேற்கொண்டார். 

இதில் ஈடுபட்டது பொன்னமராவதி அருகே வேகுபட்டியை சேர்ந்த வாலிபர் வெங்கட் மகன் அரவிந்தராஜ் என தெரிய வந்தது. அவர் மீது போக்சோ சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News