உள்ளூர் செய்திகள்
கொலை

விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை

Published On 2021-12-21 12:29 IST   |   Update On 2021-12-21 12:29:00 IST
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவெண்ணைகுழி கிராமத்தை சேர்ந்தவர் வேலு. அவரது மகள் கண்ணகி (வயது 20). இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.

கடந்த 18-ந் தேதி வீட்டைவிட்டு சென்ற கண்ணகி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணகியை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசில் கண்ணகியின் தாய் ராஜலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கண்ணகியை தேடி வந்தனர். இதற்கிடையில் ரூபநாராயணநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் இளம்பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான கல்லூரி மாணவி கண்ணகி என தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.

எனவே அந்த மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடல் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவரும்.

Similar News