உள்ளூர் செய்திகள்
நாகையில் மாவட்ட அளவில் பெண்களுக்கான கபடி போட்டி நடந்த போது எடுத்த படம்

நாகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி - 60 அணிகள் பங்கேற்பு

Published On 2021-12-20 11:54 GMT   |   Update On 2021-12-20 11:54 GMT
நாகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழுடன், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
வெளிப்பாளையம்:

நாகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அமெச்சூர் கபடி கழகம் மாவட்ட தலைவர் ஆனந்த வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் சந்திரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

போட்டியில் ஆண்களுக்கான சீனியர், ஜூனியர் 85 கிலோ மற்றும் 70 கிலோ எடை பிரிவில் 50 அணிகள் கலந்து கொண்டன. பெண்களுக்கான சீனியர், ஜூனியர் 75 கிலோ மற்றும் 60 கிலோ எடை பிரிவில் 10 அணிகள் கலந்து கொண்டன.

பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் நாகை கீச்சாங்குப்பம் அணியும், திருப்பூண்டி அணியும் மோதின. இதில் கீச்சாங்குப்பம் அணி அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. இதேபோல ஆண்கள் ஜூனியர் பிரிவில் ஆற்காட்டுதுறை அணியும், சோழவித்யாபுரம் அணியும் மோதின. இதில் ஆறுகாட்டுத்துறை அணி வெற்றி பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழுடன், ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றன.

Tags:    

Similar News