உள்ளூர் செய்திகள்
சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி

Published On 2021-12-18 17:56 GMT   |   Update On 2021-12-18 17:56 GMT
சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின.
கடலூர்:

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. 

இதற்கிடையே, சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News